Monday, November 21, 2016

காளாஞ்சகப்படை PSORIASIS,(சோரியாசிஸ்)

காளாஞ்சகப்படை PSORIASIS,(சோரியாசிஸ்) செதிள் உதிர் நேய்,வெண்பருச்செதிள், கிடிபகுட்டம்,கஜசர்ம குட்டம் என்பன இதன் வேறு பெயர்கள்.புறத்தோலை மட்டும் தாக்கக்கூடிய இயல்புடையது. உலக மக்கள் தொகையில் 2 முதல் 3 விழுக்காடு வரை காணப்படும். இந்நோய்.இன,மத,சமுதாய வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் தன்மை உடையது.
நோய்க்காரணங்கள் குறிப்பிட்டு ஓர் காரணத்தைக் கூறஇயலாதவாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான காரணங்கள் நோய் பாதிப்பை ஏற்ப்டுத்துகின்றன.
நம்தோல் இயல்பாகத் தானேபுதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையது. சாதாரணமாக அடித்தோலில் உற்பத்தியாகும் மேல்தோல் விலங்கள் (Epidermal cells) மேல்தோலை சென்றடைய 25முதல்28 நாட்களாகும்.ஆனால் காளாஞ்சகப்படையில் இந்த விலங்களின் உற்பத்தி துரிதமாக இருப்பதால 3 முதல் 7நாட்களில் நடைபெறும். இதனால் மேல்தோலின் உற்பத்தி மிகவும் அதிகரித்து அது உரிய ஆரம்பிக்கும். 
நோயின் குறிகுணங்கள்
தோல் சிவந்து தேகமெங்கும் படைபோலத் தடித்துப் பரவும் பின் தோல் உரியும். சில நேரங்ளில் தினவெடுக்கும். மிகுவதும் குறைவதுமாக மாறி மாறி ஏற்படும் இந்நோய் ஏறக்குறைய12 வாரங்கள் படிப்படியாக தீவிரநிலையை அடைந்து பின் படிப்படியாகக் குறையும்.
இந்நோய் பெரும்பாலும் தலை, முழங்கால்,முழங்கை,முதுகு,கைகால்களின் வெளிப்புறம்,அக்குள், வாய்,ஆண்குறி,அடிவயிறு,தொடை,முதலிய இடங்களில் காணப்படும். இந்நோய் சில வேளைகளில் மூட்டுக்களைத் தாக்கும் இயல்புடையது. இடுப்பு மற்றும் முழங்கால் முழங்கை, கை கால்கணுக்கள் என எல்லா மூட்டுக்களிலும் தாக்கம் ஏற்பட்டு வலியை உண்டாக்கி இயக்கத்தையும் கட்டுப்படுத்தும். காதுத்துளைகள்,தலை,நெற்றியின் மேல்புறம் இப்படை பரவும்.இடுப்பு,பிட்டம்,ஆகியப் பகுதிகளிலும் பரவும்.சிலருக்கு இப்படைகளில் செதிள்கள் முழுவதுமாக உதிராமல் அடைபோல ஒட்டிக்கொண்டு யானைத்தோல் போன்று தோற்றாம் அளிக்கும்.
உள்ளங்கை,உள்ளங்கால்களில் உண்டாகும் காளாஞ்சகப்படைகளில் செதிள் உதிர்வதும்,குறைவதுமாக இருப்பினும்,வறட்சி,வெடிப்பு, வேதனை, சில வேளை குருதிநீர் வடிதலும் காணும். 
காளாஞ்சகப்படைக்கு மருந்து :
1,செம்புச் செந்தூரம்.
2,செம்பு பற்பம்.
3,செம்புச்சுண்ணம்.
4,கருவங்கப் பற்பம்.
5,கருவங்கச்சுண்ணம்.
6,காளமேக நாராயணச் செந்தூரம்.
7,இடிவல்லாதி.
இம்மருந்துகளில் ஒன்றை (தக்க அளவு) மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்நோயை முற்றிலும் குணப் படுத்த முடியாது. மேற்கண்ட மருந்துகளால் 3முதல்5ஆண்டுகள் வரை வராமல் தடுக்கத்தான் முடியும். மீண்டும் வரும்போது மீண்டும் மருந்து சாப்பிடவும். இது எனது அனுபவம்.
தொடர்புக்கு:
K.A.கதிரேசன் பரம்பரை சித்த வைத்தியர்,
கல்யாணராமநாதபுரம் (K.R.புரம்)
பெருமகளூர் (P.O)
பேராவூரணி (T.K)
தஞ்சாவூர் (D.t)
614612.
கைபேசி எண்:9865070850; 9943850856.

No comments:

Post a Comment