வெள்ளிப் பற்பம்
வெள்ளிப் பொடி 100 கிராம் (அல்லது வேண்டிய அளவு) எடுத்து கல்வத்தில் போட்டு மணத்தக்காளிச் சாறு விட்டு 12 மணிநேரம் அரைத்து வில்லைத் தட்டி காய வைத்து அகலில் வைத்து அகல் மூடி 10 எருவில் புடம் போடவும். பிறகு முன்போல் அரைத்து 15 எருவில் புடம் 2 ,போடவும். * மகிழம் பூ சாற்றில் 12 மணிநேரம் அனைத்து 20 எருவில் 3 புடம். * உத்தாமணிச்சாற்றில் முன்போல் அரைத்து 25 எருவில் 3 புடம். * சிறுஅம்மன் பச்சரிசிச் சாற்றில் 12 மணிநேரம் அரைத்து 30 எருவில் 3 புடம். ஆலம் விழுது சாற்றில் 12 மணி நேரம் அரைத்து 35 விராட்டியில் 3 புடம். * முள்ளிக்கீரைச் சாற்றில் முன்போல் அரைத்து 40 விராட்டியில் 3 புடம். * கோவையிலைச் சாற்றில் முன்போல் அரைத்து 45 முதல் 50 விராட்டி வரை மூன்று புடம் போடவும். தழுக்கு (உலோக சத்து) நீங்கும் வரை 1அல்லது 2 புடம் கூடுதலாக போடலாம். தாதுவிருத்தி லேகியத்தில் காலை மாலை அரிசி அளவு 48 நாள் சாப்பிடவும். தீரும் நோய்கள்.: ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி., ஆண்குறி எழுச்சியின்மை, வெட்டைச் சூடு, உடல் வலிமை குறைவு, விந்து நஷ்டம்., காசம், போன்றவை தீரும்.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment