Friday, November 11, 2016

மன்மத லோகச் செந்தூரம்

மண்புழு சுத்தித்து உலர்த்தி சுட்டெடுத்த கரி 40.கிராம், இரும்பு தூள் 10 கிராம், சாதி லிங்கம் 10கிராம், கெந்தகம் 10 கிராம். முதலில் லிங்கம் கெந்தகம் சேர்த்து அரைத்து பிறகு மற்ற மருந்துகளை சேர்த்து அரைத்து. பிறகு பொற்றிலைக்கையான் சாற்றால் 12 மணிநேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து 50 எருவில் புடம்., கருப்பாக செந்தூரம் கிடைக்கும், பிறகு மீண்டும் 10 கிராம் கெந்தகம் சேர்த்து முன்சாற்றில் அரைத்து 60 எருவில் புடம்., இது போல 5புடமிடவும். நல்ல சிவப்பு நிறச் செந்தூரம் கிடைக்கும், பிறகு 10 லிங்கம், 10 கிராம்கெந்தகம் சேர்த்து முன் சாற்றால் அரைத்து வில்லை காயவைத்து செந்தூரச் சட்டியில் போட்டு மேல்சட்டி மூடி சீலைமண் செய்து 10 மணிநேரம் எரிக்கவும், பிரித்துப் பார்க்க மேலே சிறிது பதங்கம் ஏறியிருக்கும், எல்லாவற்றையும் சுரண்டி முன்சாற்றால் அரைத்து முன்போலே எரிக்கவும் பதங்கம் மேலே ஏறாதவரை எரித்து எடுக்க உயர்வான மன்மத லோக செந்தூரம் ஆகும். தீரும் நோய்கள்.: காசம், சுவாசகாசம், இருமல்.,தேக துர்பலம், துரிதஸ்கலிதம், தேக உளைச்சல், சூலை, குண்மம், ஆண்மை விருத்தி.,ஆண்குறி எழுச்சியின்மை, விந்து நட்டம்.,உடலழகுண்டாகும். காலை.,மாலை கடுகு முதல் குன்றியிடை, எமது பதிவிலுள்ள ஏதேனும் விரியவிருத்தி லேகியத்தில் சாப்பிடவும்., இது எமது பரம்பரை முறையாகும், 
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment