சுத்தி செய்த வெள்வங்கத்தை நன்கு கழுவிய இரும்பு சட்டியில் போட்டு அடுப்பு எரிக்க உருகும் போது சிறு அம்மன் பச்சரிசி யிலையை போட்டு வறுக்க மஞ்சள் நிற பற்பம் கிடைக்கும். அதை எடுத்து கல்வத்தில் போட்டு கஞ்சாயிலைச் சாறுவிட்டு 12 மணிநேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து அகலில் வைத்து அகல் மூடி சீலைமண் செய்து 20 எருவில் புடம். மீண்டும் முன்சாற்றால் 12 மணிநேரம் அரைத்து வில்லை செய்து 30 எருவில் புடம் போடவும். இதுபோல 5 புடம் போடவும். காலை, மாலை, அரிசி எடை தாதுவிருத்தி லேகியத்தில் வைத்து சாப்பிடவும், தீரும் நோய்கள் : மேகம் 20, ஆண்மைகுறைவு , சீக்கிரத்தில் விந்து வெளியேருதல், கிரந்தி, கடுப்பு, பிரமியம், மூலச்சூடு, நீரளிவு.தோல் நோய்கள்., இது எமது பரம் பரை அனுபவ முறையாகும்.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
![]() |
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்


No comments:
Post a Comment