Sunday, November 13, 2016

வைத்தியர்களுக்கு மட்டும்

வீரம் சுத்தி முறை : பிரண்டையைக் கொண்டு வந்து கணுக்களை நீக்கி இடித்து வேண்டியளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சி கசாயம் 5 படி எடுத்துக் கொள்ளவும். அதை 10 லிட்டர் கொள்ளளவுள்ள ஒருமண் பானையில் இட்டு அதற்கு வேடுகட்டி அதில் மொச்சை அளவாக உடைத்த வீரத்துண்டுகளை பரப்பி வைத்து அதன் மேல் பொறுந்தும் ஒரு சட்டியில் மையத்தில் ஒரு துளை போட்டு கவிழ்த்து வைத்து போறுந்துவாய்க்கு சீலைமண் பூசி உலர்ந்த பின் அடுப்பேற்றி 5 மணி நேரம் எரித்து எடுக்கவும். பிறகு மிளகு வேண்டிய அளவு எடுத்து வடிச்ச கஞ்சி கொண்டு அரைத்து வீரத்துண்டுகளுக்கு கவசம் செய்து சற்று உலர்ந்த பின் ஒரு பானையில் 5 படி இளநீர் விட்டு 5 கிராம் பச்சை கற்பூரம் நுனிக்கிப் போட்டு முன் போல் எரித்து எடுத்து மிளகு கவசத்தை பிரித்து எடுத்து காயவைத்துக் கொள்ளவும். இதுவே உயர்ந்த. சுத்தி முறையாகும். இது எமது குடும்ப முறை. அனுப்பவமுறையாகும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment