சுத்தித்த நாகம் 100 கிராம். நன்கு கழுவிய இரும்பு சட்டியிலிட்டு உலையில் வைத்தூத உருகும் , அப்போது வேலிப்பருத்தி இலையைப் போட்டு வறுக்க மஞ்சள் நிறப் பற்பம் கிடைக்கும். பிறகு வேலிப்பருத்தி இலைச்சாற்றால் 6 மணிநேரம் அரைத்து புடம் போடவும். இதுபோல 5புடம் போடவும்.பிறகு துத்தியிலைச்சாற்றில் அரைத்து 3 புடம் போடவும். பற்பத்தின் எடையில் பாதியளவு சுத்தித்த ரசம் எடுத்து அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வெடியுப்பு திராவகம் ஊற்றி வெயிலில் வைக்கவும் ரசம் பூத்து உப்பாகும். பிறகு சுத்தித்த நத்தை ஓட்டை உத்தாமணிச் சாற்றால் அரைத்து ஊதி யெடுக்க நத்தை ஓட்டு சுண்ணம் கிடைக்கும். நாகப்பற்பம் எடைக்கு சமமாக நத்தை ஓட்டு சுண்ணமும், ரசப்பூவும் சேர்த்து உத்தாமணிச் சாற்றால்அரைத்து காய வைத்து சட்டியில் போட்டு மேல் சட்டி மூடி சீலைமண் 3 செய்து 9 மணிநேரம் எரிக்கவும் . பிரித்து பார்க்க மேல் சட்டியில் பதங்கம் யேரியிருக்கும், அதில் சிலநேரம் ரசமும் இருக்கலாம் ஆகவே மீண்டும் வெடியுப்பு திராவகம் விட்டு வெயிலில் வைத்து முன் போல் அரைத்து பதங்கம் மேலே ஏறாதவரை எரித்து எடுக்கவும்.
காலை, மாலை நெய்,(அல்லது) வெண்ணையில் குன்றிமணி எடை சாப்பிடவும். தீரும் நோய்கள் : மூலம்.,பவுத்திரம், ரத்தமூலம், சீழ் மூலம்., இரத்தபேதி, கிராணி, உடலில் உண்டாகு கொப்பளம்., ஆண்மை விருத்தி, ஆசனவாய் எரிச்சல்., ஆசனவாய் அரிப்பு.,போன்றவை தீரும். இது எங்கள் பாரம் பரிய முறையாகும்.,
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:
Post a Comment