Friday, November 11, 2016

அயவீரச் செந்தூரம்



சுத்தித்த இரும்பு தூள் 100 கிராம், சுத்தித்த வீரம் 100 கிராம், சுத்தித்த கெந்தகம் 200 கிராம், இவற்றை கல்வத்தில் போட்டு நன்கு அரைத்த பின் சோற்றுக்கற்றாழைச் சாறு விட்டு 12மணிநேரம் அரைத்து வில்லை செய்து சட்டியில் போட்டு மேல்சட்டி மூடி சீலைமண் செய்து அடுப்பில் வைத்து 9மணிநேரம் எரிக்கவும், சூடுஆரியபிறகு பிரித்துப் பார்க்க மேலே பதங்கமும், கீழே மருந்தும் இருக்கும் எல்லாவற்றையும் சேர்த்து மீண்டும் பிரண்டைச்சாற்றால் மீண்டும் முன் போல் அரைத்து.,முன்போல் எரிக்கவும், இதுபோல வெற்றிலைச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, போன்றவற்றில் அரைத்து 5 எரிப்பு எரிக்கவும், பதங்கம் ஏறாமல் நன்கு சிவத்த செந்தூரமாக கிடைக்கும். 
தீரும் நோய்கள், வாதம் 81,சூலை 18,,குண்மம் 8, சோகை, காமாலை., மேலும் பலநோய்களுக்கு தக்க அனுபானங்களில் கொடுக்க பலநோய்கள் தீரும்., இது எங்கள் பரம்பரை  முறையாகும். 
நன்றி
தொடர்புக்கு 
அ.கதிரேசன் பாரம்பரிய சித்தவைத்தியர் 





No comments:

Post a Comment