Sunday, November 13, 2016

கண்டதையும் நம்பி ஏமாராதீர்கள் நண்பர்களே


இரசமணி என்று - பல விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள், சித்ததர்கள் கூறும் உண்மையான இரசமணியை மிக மிக குறைந்த நபர்களே செய்கிறார்கள் அவர்கள் இதை விற்பனை செய்வதில்லை. இதைக் கொண்டு தனக்கு வேண்டிய முத்தியை தேடிப் போவார்கள்.,இதுதான் உண்மை. மாறாக பலர் உலோகத்தைக் கொண்டு (வெள்ளி, வங்கம், நாகம், தாமிரம்.), திராவகங்களைக் கொண்டும், பாசாணங்களைக் கொண்டும் (துருசு, பால் துத்தம்,) , தாதுப்பொருள் (அப்ரேக்) கொண்டும், போலியான இரசமணிகள் செய்து விற்பனை செய்து வருகிறார்கள், இதில் எந்த சக்தியும் கிடையாது. எந்த பயனும் கிடையாது. மாறாக. போலி இரசமணி அணிபவர்களுக்கு தோலின் நிறம் மாறுதல், அரிப்பு.,தீராத தோல் நோய்கள் ஏற்படுகிறது. ஆகவே ஆண்மீக நண்பர்களும், போராசைக் கொண்ட நபர்களும், சிந்திக்காமல் எளிதில் ஏமாறுகிறார்கள். உழைப்பு.,முயற்சி இதில் கிடைக்கும் பயன்களை விட போலி இரசமணி மூலம் நிச்சயம் எந்த பயனும் கிடைக்கவே கிடைக்காது. ஒரு செப்பு தகட்டில் எந்திரம் எழுதி.,மந்திரம் செபித்தால் அதில் கிடைக்கும் பயன் கூட போலி இரசமணியில் கிடைக்காது. அடியேனும் உண்மையான இரசமணியும், போலியான இரசமணி செய்யத் தெரிந்தவன் தான்.தயவு செய்து சொல்கிறேன் ஏமாறாதீர்கள் நண்பர்களே.




நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment