Monday, November 21, 2016

இரசசெந்தூரம்

சுத்தித்த கெந்தகம் 50கிராம், சுத்தித்த தாளகம் 50கிராம் இரண்டையும் கல்வத்தில் போட்டு நன்கு அரைத்து பிறகு நாவல்பட்டை சாரு50மில்லி,அரசம்பட்டை சாரு50மில்லி,செம்பருத்தி பூ,இலைச்சாரு 50மில்லி (சிவப்பு பூ பூக்கும் பருத்தி) இவை எல்லாம் கலந்து நன்றாக அரைத்து, அதிலொரு குகையும் மூடியும்செய்து உலர்ந்த பின் ஒரு மண்சட்டியில் ஒரு படி வறுத்திடித்த உப்பை கொட்டி அதன் மேலே குகை யை வைத்து சுத்தித்த இரசம் 100கிராம் விட்டு முன் செய்த மூடியைக் கொண்டு மூடி முன்சாற்றால் இடைவெளி இல்லாமல் பூசி உலரவைத்து பிறகு அதன் மேல் ஒரு படி உப்பை கொட்டி மேல்சட்டி மூடி சீலைமண் மூன்று செய்து உலர்த்தி அடுப்பிலிட்டு ஆறு மணிநேரம் எரித்து எடுத்துப்பார்க்க இரசசெந்தூரம் உருகி கல்போல இருக்கும் அதை எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளைவும்.
அளவு :இரண்டு அரிசி.

துணைமருந்து :கருப்பட்டி,இருவேளை ஏழு நாள் சாப்பிடவும்,தீரும் நோய்கள் :சூலை 18, கிரந்தி, தடிப்பு, ஊரல்,மேகப்புண்,அரிப்பு, தேமல், சொறி,காளாஞ்சகப்படை,மூட்டுவலிகள்


நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment