Sunday, November 13, 2016

வாதசம்மந்தமான நோய்களுக்கு அயக்காந்தச் செந்தூரம்

அயம் (இரும்புத்தூள்), காந்தம் இரண்டும் சம அளவாக எடுத்து பிரணண்டைச்சாற்றால்9மணிநேரம் அரைத்து வில்லை செய்து புடமிட செந்தூரம்., இதுபோல 10 புடமிடவும். நல்ல செந்தூரம். பிறகு செந்தூரத்தை பிரண்டைச் சாற்று விட்டு சூரியபுடமிடவும். இதுபோல 3 முறைகள் செய்து, அரைத்து பாட்டிலில் அடைக்கவும். அனுபானம் : 
தேவையான அளவு பிரண்டைக்கொழுந்தை கொண்டுவந்து அரைத்து காயவைத்து சூரணமாக செய்து கொள்ளவும். அளவு : செந்தூரம் 2அரிசி எடையும், மேற்படி சூரணம் 4 அரிசி எடையும் எடுத்து தேனின் காலை மாலை சாப்பிடவும். பத்தியம் இல்லை. மருந்து சாப்பிடும் போது பிரண்டைத் துவையல் சாப்பிடவும்.
தீரும்நோய்கள் :
மூட்டுவலிகள், பிடிப்புகள், வாதநோய்கள், முழங்கால் வலிகள், நாள்பட்ட சுளுக்குகள், பசியின்மை, செறியாமை, குடல் புண்கள். வயிற்றுவலிகள் போன்றவை குணமாகும்.  அடியேன் கூறும் பதிவுகள் அனைத்தும் எங்கள் பரம்பரை முறைகள் ஆகும்.

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment