சுத்தித்த கருவங்கம் எடுத்து ஒரு இரும்பு சட்டியில் போட்டு அடுப்பேற்றி எரிக்க உருகும் அப்போது ஆவாரைஇலையை சிறிது சிறிதாக போட்டு வறுக்க கருவங்கம்,மடியும் இது போல நன்கு மடியும்வரை 6மணி நேரம் வறுக்கவும், மஞ்சள் நிற பற்பம் கிடைக்கும்.இப்பற்பத்தை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் 6மணிநேரம் அரைத்து வில்லை செய்து அகலில் வைத்து சீலைமண் செய்து 20எருவில் புடம்.இது போல் 5புடம் போடவும்.பிறகு மேற்படி பற்பம் 35கிராம்,ரசம்35 கிராம்,கெந்தகம்35 கிராம், தாளகம்35கிராம்,மனோசீலை 35கிராம்,இவைகளை கல்வத்தில் போட்டு நன்கு அரைத்து பிறகு சோற்றுக்கற்றாழைச் சாற்றால் அரைத்து வில்லை செய்து காய்ந்தவுடன் அகலில் வைத்து மேல்அகல் மூடி சீலைமண்3 செய்து மண்றைவு புடம் போடச் செந்தூரம். சிலநேரங்களில் தீக்குறைவால் கருப்பாக இருந்தால் மீண்டும் மேற்படி சாற்றால் அரைத்து முன் போல் புடமிடவும்,செந்தூரம்கிடைக்கும். இரண்டு அரிசி அளவு எடுத்து நெய்யில் கலந்து கொடுக்கவும். மேகம் 21,படைகள், சொரி,குஷ்டம்,பாண்டு,காமாலை,சோரியசிஸ்,தீரும்.
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment