அயப்பொடி (இரும்பு தூள்) தேவையான அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு 9மணிநேரம் அரைத்து புடமிடவும். பிறகு அவரி (நீலி செடி) இலைச்சாற்றில் அரைத்து 5 புடம் போடவும். பிறகு அரசமரப்பட்டையின் சாறு (அல்லது) கசாயமிட்டு அரைத்து 4 புடம் போடவும். செந்தூரம். இந்த செந்தூரத்தை அவரியிலைச்சாறு , அரசம்பட்டைச் சாறு (அல்லது) கசாயம் சமமாக கலந்து வெயிலில் நன்றாக காயவைக்கவும், இதுபோல. 3 முறைகள் பாவனைகள் செய்யவும். காய்ந்ததும் தூள் செய்து சீசாவில் வைத்துக் கொள்ளவும்.
துணைமருந்து : தேவையன அளவு அவரியிலை, அரசம் பட்டையை நன்கு காயவைத்துக்கொண்டு தூள்செய்து வைக்கவும். அளவு : செந்தூரம் 1 அரிசி எடையும், சூரணம் பட்டாணி அளவும் எடுத்து தேனில் கலந்து காலை, மாலை, 7 நாட்கள் கொடுக்கவும். தீரும் நோய்கள் :வரைக்காமாலை, ஊதுகாமாலை, மஞ்சள் காமாலை, இரத்தகாமாலை (சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்), கல்லீரல் வீக்கம்., மண்ணீரல் வீக்கம்., சோகை, வயிற்றுபுண்கள், விசகடிகளால் ஏற்படும் புண்கள், அரிப்புகள், சிலந்தி கடிகள்,போன்ற நோய்கள் தீரும். இதுவும் எங்களது பரம்பரை முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:
Post a Comment