Sunday, November 13, 2016

துருசு செந்தூரம்

அயச்செந்தூரம், கெந்தகம், வறுத்த துருசு சமமாக எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றால் 3 நாட்கள் அரைத்து, நன்கு உலர்த்தி அகலில் வைத்து மேல் அகல் மூடி சீலைமண் செய்து 30 எருவில் புடம். பிறகு இதன் எடைக்கு கால் பங்கு சுத்தி செய்த வீரம் சேர்த்து முன்போல் பழச்சாற்றால் அரைத்து 5புடம். ஓருசில நேரத்தில் ஓரிரரு புடம் அதிகமாகலாம். செந்தூரத்தில் களிம்பு நீங்கிய பிறகு காலை மாலை அரிசி எடை அளவு தேன், நெய், லேகியத்தில். வைத்து 48 நாட்கள் சாப்பிடவும். தீரும் நோய்கள் : வெண்புள்ளி, மேக நோய்கள்., வாத நோய்கள், பித்த நோய்கள், கபநோய்கள், சகலவிதமான தோல் நோய்கள். தீரும். (சோரியாசிஸ் மட்டும் 5 வருடம் வராமல் கட்டுப்படுத்தும் ) இது எங்கள் பரம்பரை முறையாகும். அனுபவமானது சகல வித நோய்களும் கண்டிப்பாக தீரும். (குறிப்பு வில்லை சீக்கிரமாக காயாது நன்கு வெயிலில் உலர்த்தவும் இதுதான் மிக முக்கியம்)
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

1 comment: