Sunday, November 13, 2016

வீரியத்திற்கு மருந்து

தண்ணீரில்லா தேங்காய்யை (கொப்பரை தேங்காய்) எடுத்து அதன் ஓட்டை கவனமாக உடைத்துக் கொண்டு அதில் ஒரு சிறு வட்டமாக ஓட்டைப் போட்டு (சில்லு எடுத்து) அதற்குள் நீர்முள்ளிவிதை 35 கிராம். சாதிக்காய் 11 கிராம்., கிராம்பு 11 கிராம், போட்டு தேங்காய் நிரைய ஆலம் பால் விட்டு தேங்காய் சில் கொண்டு மூடி மூன்று நாள் வைத்து. மூன்றாம் நாள் கோதுமை மாவை வெண்ணீரில் பிசைந்து தேங்காய்க்கு பூசி பிறகு சீலைசெய்து அதன் மேல் மாவுபூசி சட்டியில் நெய் விட்டு எரிக்கவும். மேற்படி தேங்காய்யை அதில் போட்டு பிரட்டி பிரட்டி விடவும். மாவு வெந்து முருகும் பதத்தில் இறக்கி வைத்து சூடு ஆரிய பிறகு மாவையும் சீலையையும் நீக்கி தேங்காயை மட்டும் கல்வத்தில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
காலை, மாலை, நெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
ஆண்மை குறைவு, ஆண்குறி எழுச்சியின்மை, சீக்கிரம் விந்து வெளியேருதல், விந்து நஷ்டம் போன்றவைகள் தீரும். (ஆலம் பால் எடுப்பது -இலையின் காம்பை.,மற்றும் நுனியை ஒடிக்க சொட்டு சொட்டாக பால் வரும்) இது எமது பரம்பரை முறையாகும். அனுபவமானது

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:

Post a Comment