Monday, December 26, 2016

ஆண்மை விருத்திக்கு வெள்வங்கச் சுண்ணம்


வெள்வங்கப் பற்பம் : சுத்தி செய்த வெள்வங்கத்தை நன்கு கழுவிய இரும்பு சட்டியில் போட்டு அடுப்பு எரிக்க உருகும் போது சிறு அம்மன் பச்சரிசி யிலையை போட்டு வறுக்க மஞ்சள் நிற பற்பம் கிடைக்கும். அதை எடுத்து கல்வத்தில் போட்டு கஞ்சாயிலைச் சாறுவிட்டு 12 மணிநேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து அகலில் வைத்து அகல் மூடி சீலைமண் செய்து 20 எருவில் புடம். மீண்டும் முன்சாற்றால் 12 மணிநேரம் அரைத்து வில்லை செய்து 30 எருவில் புடம் போடவும். இதுபோல 5 புடம் போடவும். காலை, மாலை, அரிசி எடை தாதுவிருத்தி லேகியத்தில் வைத்து சாப்பிடவும், தீரும் நோய்கள் : மேகம் 20, ஆண்மைகுறைவு , சீக்கிரத்தில் விந்து வெளியேருதல், கிரந்தி, கடுப்பு, பிரமியம், மூலச்சூடு, நீரளிவு.தோல் நோய்கள்., இது எமது பரம் பரை அனுபவ முறையாகும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்த வைத்தியர்





3

Thursday, November 24, 2016

நவ மூலத்திற்கு நத்தை லேகியம்

வேண்டிய அளவு நத்தையை கொண்டு வந்து ஒரு இரவு தண்ணீரில் பேட மண்ணை கக்கிவிடும். பிறகு அவித்து நத்தையின் கறியை 50 கிராம், எடுத்துக் கொள்ளவும். சாதிக்காய் 10 கிராம், சாதிபத்திரி 10 கிராம், கிராம்பு 10 கிராம். இவரை இடித்து தூள் செய்து கொள்ளவும். நத்தைக்கறியை முதலில் நன்கு அரைத்து கொண்டு பிறகு தூள் செய்த மருந்தையும் போட்டு நன்கு அரைத்த பின் கல்கண்டு 80 கிராம் சேர்த்து அரைக்கவும். பின் தேவையன அளவு தேன் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். ஒரு மாதம் வரைகெட்டுப்போகாது. இருப்பினும் 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து கொள்வது உத்தமம். காலை, மாலை, எலந்தப் பழம் அளவு எடுத்து சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும். பின் ஒரு குவளை பால் சாப்பிடவும். இதுபோல நோய் தீரும் வரை சாப்பிடலாம். பத்தியம் : அதிக காரசாரமான உணவுகளை நீக்கவும். தீரும் நோய்கள்: வெளிமூலம், உள்மூலம், மூலமுளைகள், இரத்தமூலம், ஆசனவாய் எரிச்சல்., இது எமது பரம்பரை அனுபவ முறையாகும்
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

பித்த சூரணம்

சுக்கு,மிளகு.,அரிசி திப்பிலி,ஓமம், பெருங்காயம் , பெருங்காயத்தை நல்லெண்ணெய்யில் போட்டு பொறித்துக்கொள்ளவும். மற்றச் சரக்குகளை நன்கு காயவைத்து இடித்து துணியில் சலித்துக்கொள்ளவும். மேற்கண்ட மருந்துகள் சமஅளவாககலந்து கொள்ளவும், 1/4 டீஸ்பூன் அளவு எடுத்து எலுமிச்சம் பழத்தை ஊறுகாய் பேல் அரிந்து அதற்குள் மேற்படி மருந்தை வைத்து இரவில் பனியில் வைத்து காலையில் பிழிந்து சாப்பிடவும். பிறகு இஞ்சியை மேல்தோல் நீக்கி நைத்து கசாயம் வைத்து சாப்பிடவும் இதுபோல 3அல்லது 5அல்லது 7 நாள் சாப்பிடவும். தீரும் நோய்கள் : பித்தம்., மயக்கம்., தலைசுற்றல்., பசியின்மை, செறிமானக்கோளாறு, நெஞ்செரிவு, வாய் நீரூரல்,புளித்த யேப்பம், பித்த வாயு,ஓக்காளம்,போன்றவை தீரும். இது எமது அனுபவ முறையாகும். தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

நீலித்தைலம்

அவரியிலைச்சாறு,சவரிக்கொடிச்சாறு,பொண்ணாங்கண்ணிச்சாறு,கரிசலாங்கண்ணிச்சாறு, மருதாணியிலைச்சாறு, கருவேப்பிலைச்சாறு,ஆலம்விழுதுச்சாறு, ஒத்த செம்பரத்தைப் பூ 20, வேம்பாடம் பட்டை, பூலாங்கிழங்கு, சிறு நன்னாரி வேர், கடைச்சரக்குகள் வகைக்கு 10 கிராம், சாறுவகைகள் வகைக்கு 20 மில்லி, கீழாநெல்லியிலை 50 கிராம், இம்மூலிகையை மட்டும் அரைத்து எடுத்துக் கொள்ளவும் மேற்படி கடைச்சரக்குகளை இடித்துக்கொள்ளவும் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதில் தேங்காய் எண்ணெய் 500 மில்லி விட்டு நன்கு கலந்து கடுகு திரள் பதத்தில் காய்ச்சி வடித்துக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை தினம் தேய்த்து வரவும். தீரும. நோய்கள் : முடிஉதிர்தல், இளநரை, தலையரிப்பு, போடுகு, கண்ணெரிச்சல், பேன் தொல்லை, ஆகியவை நீங்கி கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும், கண்பார்வை தெளிவடையும். இது எமது அனுபவமுறையாகும்.
தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்

மனை (வீட்டில்) யில் பயிர் செய்யக் கூடாத மரங்கள்.
பருத்தி யகத்தி பனை நெல்லி நாவல் எருக்கு புளி முருங்கை யோடு எட்டும் இருக்கில் எந்த மனையானாலும் இந்திரன் வாழுமென்றாலும் அந்த மனைபாழென்றரி. ஆதாரம் ஏடு.
இந்த எட்டு மரங்களை வீட்டருகே வளர்த்தலை தவிர்த்தல் நன்று.

தொடர்புக்கு :00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்


கருவங்கச் செந்தூரம்

சுத்தித்த கருவங்கம் எடுத்து ஒரு இரும்பு சட்டியில் போட்டு அடுப்பேற்றி எரிக்க உருகும் அப்போது ஆவாரைஇலையை சிறிது சிறிதாக போட்டு வறுக்க கருவங்கம்,மடியும் இது போல நன்கு மடியும்வரை 6மணி நேரம் வறுக்கவும், மஞ்சள் நிற பற்பம் கிடைக்கும்.இப்பற்பத்தை சோற்றுக்கற்றாழைச் சாற்றில் 6மணிநேரம் அரைத்து வில்லை செய்து அகலில் வைத்து சீலைமண் செய்து 20எருவில் புடம்.இது போல் 5புடம் போடவும்.பிறகு மேற்படி பற்பம் 35கிராம்,ரசம்35 கிராம்,கெந்தகம்35 கிராம், தாளகம்35கிராம்,மனோசீலை 35கிராம்,இவைகளை கல்வத்தில் போட்டு நன்கு அரைத்து பிறகு சோற்றுக்கற்றாழைச் சாற்றால் அரைத்து வில்லை செய்து காய்ந்தவுடன் அகலில் வைத்து மேல்அகல் மூடி சீலைமண்3 செய்து மண்றைவு புடம் போடச் செந்தூரம். சிலநேரங்களில் தீக்குறைவால் கருப்பாக இருந்தால் மீண்டும் மேற்படி சாற்றால் அரைத்து முன் போல் புடமிடவும்,செந்தூரம்கிடைக்கும். இரண்டு அரிசி அளவு எடுத்து நெய்யில் கலந்து கொடுக்கவும். மேகம் 21,படைகள், சொரி,குஷ்டம்,பாண்டு,காமாலை,சோரியசிஸ்,தீரும்.
தொடர்புக்கு :
00919865070850
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

பறங்கிப்பட்டை சுத்தி

பறங்கிப்பட்டையை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு மண்சட்டியில் பசும்பால் விட்டு மேற்படி துண்டுகளை அதில் போட்டு காய்ச்சி கழுவி எடுத்துக் கொள்ள சுத்தி.பிறகு நன்கு வெயிலில் உலர்ந்தி இடித்து துணியில் சலித்துக் கொள்ளவும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

காளாஞ்சகப்படை (சோரியாசிஸ்) -க்கு. கட்டுப் படுத்த எளிய மருந்து

:ஆகாச கருடக்கிழங்கு தூள் -100கிராம்,கருஞ்சீரகம் -25கிராம்,நற்சீரகம் -25கிராம்,சுத்திசெய்த பறங்கிப்பட்டை தூள் -25கிராம்,இவைகளை கல்வத்தில் போட்டு வெங்காயச் சாற்றில் நன்கு அரைத்து சூரிய ஒளியில் நன்கு காயவைத்து சூரணித்துக் கொள்ளவும்.
காலை,மாலை,1/4 அல்லது 1/2 டீஸ்பூன் அளவு 10 நாள் கொடுக்கவும். 5நாள் இடைவெளி விட்டு மீண்டும் மருந்து சாப்பிடவும். 
தீரும் நோய்கள் :சகல புண்கள் கிரந்தி,அரிப்பு,காளாஞ்சகப்படை (சோரியாசிஸ்) தீரும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

Monday, November 21, 2016

காளாஞ்சகப்படை PSORIASIS,(சோரியாசிஸ்)

காளாஞ்சகப்படை PSORIASIS,(சோரியாசிஸ்) செதிள் உதிர் நேய்,வெண்பருச்செதிள், கிடிபகுட்டம்,கஜசர்ம குட்டம் என்பன இதன் வேறு பெயர்கள்.புறத்தோலை மட்டும் தாக்கக்கூடிய இயல்புடையது. உலக மக்கள் தொகையில் 2 முதல் 3 விழுக்காடு வரை காணப்படும். இந்நோய்.இன,மத,சமுதாய வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கும் தன்மை உடையது.
நோய்க்காரணங்கள் குறிப்பிட்டு ஓர் காரணத்தைக் கூறஇயலாதவாறு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான காரணங்கள் நோய் பாதிப்பை ஏற்ப்டுத்துகின்றன.
நம்தோல் இயல்பாகத் தானேபுதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையது. சாதாரணமாக அடித்தோலில் உற்பத்தியாகும் மேல்தோல் விலங்கள் (Epidermal cells) மேல்தோலை சென்றடைய 25முதல்28 நாட்களாகும்.ஆனால் காளாஞ்சகப்படையில் இந்த விலங்களின் உற்பத்தி துரிதமாக இருப்பதால 3 முதல் 7நாட்களில் நடைபெறும். இதனால் மேல்தோலின் உற்பத்தி மிகவும் அதிகரித்து அது உரிய ஆரம்பிக்கும். 
நோயின் குறிகுணங்கள்
தோல் சிவந்து தேகமெங்கும் படைபோலத் தடித்துப் பரவும் பின் தோல் உரியும். சில நேரங்ளில் தினவெடுக்கும். மிகுவதும் குறைவதுமாக மாறி மாறி ஏற்படும் இந்நோய் ஏறக்குறைய12 வாரங்கள் படிப்படியாக தீவிரநிலையை அடைந்து பின் படிப்படியாகக் குறையும்.
இந்நோய் பெரும்பாலும் தலை, முழங்கால்,முழங்கை,முதுகு,கைகால்களின் வெளிப்புறம்,அக்குள், வாய்,ஆண்குறி,அடிவயிறு,தொடை,முதலிய இடங்களில் காணப்படும். இந்நோய் சில வேளைகளில் மூட்டுக்களைத் தாக்கும் இயல்புடையது. இடுப்பு மற்றும் முழங்கால் முழங்கை, கை கால்கணுக்கள் என எல்லா மூட்டுக்களிலும் தாக்கம் ஏற்பட்டு வலியை உண்டாக்கி இயக்கத்தையும் கட்டுப்படுத்தும். காதுத்துளைகள்,தலை,நெற்றியின் மேல்புறம் இப்படை பரவும்.இடுப்பு,பிட்டம்,ஆகியப் பகுதிகளிலும் பரவும்.சிலருக்கு இப்படைகளில் செதிள்கள் முழுவதுமாக உதிராமல் அடைபோல ஒட்டிக்கொண்டு யானைத்தோல் போன்று தோற்றாம் அளிக்கும்.
உள்ளங்கை,உள்ளங்கால்களில் உண்டாகும் காளாஞ்சகப்படைகளில் செதிள் உதிர்வதும்,குறைவதுமாக இருப்பினும்,வறட்சி,வெடிப்பு, வேதனை, சில வேளை குருதிநீர் வடிதலும் காணும். 
காளாஞ்சகப்படைக்கு மருந்து :
1,செம்புச் செந்தூரம்.
2,செம்பு பற்பம்.
3,செம்புச்சுண்ணம்.
4,கருவங்கப் பற்பம்.
5,கருவங்கச்சுண்ணம்.
6,காளமேக நாராயணச் செந்தூரம்.
7,இடிவல்லாதி.
இம்மருந்துகளில் ஒன்றை (தக்க அளவு) மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்நோயை முற்றிலும் குணப் படுத்த முடியாது. மேற்கண்ட மருந்துகளால் 3முதல்5ஆண்டுகள் வரை வராமல் தடுக்கத்தான் முடியும். மீண்டும் வரும்போது மீண்டும் மருந்து சாப்பிடவும். இது எனது அனுபவம்.
தொடர்புக்கு:
K.A.கதிரேசன் பரம்பரை சித்த வைத்தியர்,
கல்யாணராமநாதபுரம் (K.R.புரம்)
பெருமகளூர் (P.O)
பேராவூரணி (T.K)
தஞ்சாவூர் (D.t)
614612.
கைபேசி எண்:9865070850; 9943850856.

லிங்கம் சுத்தி

எலுமிச்சம் பழச்சாறு தேன்இரண்டும் சமஅளவாக கலந்து ஒரு பீங்கான் பாத்திரத்தில் போட்டு மொச்சை அளவாக உடைத்து எடுத்து லிங்க துண்டுகளை அதில் போட்டு சூரிய வெயிலில் 5 அல்லது 7 நாள்கள் ஊறவைத்து கழுவி எடுக்க நல்ல சுத்தியாகும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

இரசசெந்தூரம்

சுத்தித்த கெந்தகம் 50கிராம், சுத்தித்த தாளகம் 50கிராம் இரண்டையும் கல்வத்தில் போட்டு நன்கு அரைத்து பிறகு நாவல்பட்டை சாரு50மில்லி,அரசம்பட்டை சாரு50மில்லி,செம்பருத்தி பூ,இலைச்சாரு 50மில்லி (சிவப்பு பூ பூக்கும் பருத்தி) இவை எல்லாம் கலந்து நன்றாக அரைத்து, அதிலொரு குகையும் மூடியும்செய்து உலர்ந்த பின் ஒரு மண்சட்டியில் ஒரு படி வறுத்திடித்த உப்பை கொட்டி அதன் மேலே குகை யை வைத்து சுத்தித்த இரசம் 100கிராம் விட்டு முன் செய்த மூடியைக் கொண்டு மூடி முன்சாற்றால் இடைவெளி இல்லாமல் பூசி உலரவைத்து பிறகு அதன் மேல் ஒரு படி உப்பை கொட்டி மேல்சட்டி மூடி சீலைமண் மூன்று செய்து உலர்த்தி அடுப்பிலிட்டு ஆறு மணிநேரம் எரித்து எடுத்துப்பார்க்க இரசசெந்தூரம் உருகி கல்போல இருக்கும் அதை எடுத்து அரைத்து வைத்துக்கொள்ளைவும்.
அளவு :இரண்டு அரிசி.

துணைமருந்து :கருப்பட்டி,இருவேளை ஏழு நாள் சாப்பிடவும்,தீரும் நோய்கள் :சூலை 18, கிரந்தி, தடிப்பு, ஊரல்,மேகப்புண்,அரிப்பு, தேமல், சொறி,காளாஞ்சகப்படை,மூட்டுவலிகள்


நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

Thursday, November 17, 2016

தாளகம் சுத்தி

பூநீறு,சுண்ணாம்பு தண்ணீரில் சுத்தித்த பிறகு இஞ்சி சாற்றில் ஒரு நாள் வெயிலில் ஊரவைக்கவும் பிறகு இஞ்சி சாற்றில் அரைத்து உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.இதுவே மிக உயந்த சுத்தியாகும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

Wednesday, November 16, 2016

கெந்தகம் சுத்தி

ஒருபடி கல்சுண்ணாம்பு 4 படி தண்ணீர் கலந்து மூன்று நாள் வைத்து நான்காம் நாள் தெளீவு நீரையை எடுத்துக்கொள்ளவும் இதுவே சுண்ண நீர் ஆகும். இந்தமுறையே உவர்மண்ணிலிருந்து பூநீறு தண்ணணீர் எடுத்துக் கொள்ளவும். இரண்டு தண்ணீரையும் சமமாக கலந்து ஒருமண்சட்டியிலிட்டு கெந்தகத்தை மொச்சையளவாக உடைத்து ஒரு துணியில் மூட்டையாக கட்டி தோலாந்திரம் கட்டி தண்ணீருக்குள் தொங்க வீட்டு மூன்று மணி நேரம் எரித்து எடுக்க சுத்தி.இதுபோல.தாளகம்,மனோசீலை,ஆமைஓடு,மான்கொம்பு,நத்தைஓடு,நண்டுகல்,கிளிஞ்சள்,கோழிமுட்டைஓடு,பலகரை,,சங்கு சுத்திசெய்து கொள்ளவும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

இரசம் சுத்தி

இரசம் ஒரு பங்கு
வேப்ப இலை 2 பங்கு
சோத்துப்பு ஒரு பங்கு சோற்றுக்கற்றாலை சோறு தேவையான அளவு
செய்முறை
வேப்ப இலையை இடித்து சோற்றுப்பு சேர்த்து நன்கு அரைத்து பிறகு இரசம் விட்டுநன்கு அரைக்க ரசம் மடியும் பிறகு சோற்றுக்கற்றாலை சோறு சேர்த்து அரைக்கவும் பிறகு பொருந்தும் 2 மண் சட்டியை எடுத்துக்கொண்டு கீழ் சட்டியில் அரைத்த விழுதை அடைபேல் தட்டி சட்டியுடன் உலர்த்தவும் பின் மேல்சட்டி மூடி சீலைமண் 3 செய்து உலர்ந்த பின் அடுப்பில் வைத்து ஒருமணி நேரம் காட்டுத்தீயாக எரித்து சூடு ஆறிய பின் கவனமாக மேல்சட்டியை எடுத்து பார்த்தால் கரித்தூள் போல படிந்திருக்கும் அதை (Brush) தூரிகை கொண்டு சுரண்டி முறட்டுத்துணியில் பிழிந்து எடுத்துக்கொள்ளவும் இதுவே உயர்ந்த இரசம் சுத்தி முறையாகும்.


*எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பாரபரமே.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

Sunday, November 13, 2016

செரிமானகோளாறு நீங்க சீரகச் சூரணம்

சீரகம் 100 கிராம், சாதிக்காய் 50 கிராம், சுக்கு 50 கிராம், (அல்லது) பெருங்காயம் 50 கிராம், இவற்றை நன்கு காயவைத்து இடித்து தூள் செய்து துணியில் சலித்து வைத்துக்கொள்ளவும். இச்சூரணத்தை சாப்பாட்டுக்கு முன் 1/4 கரண்டி(ஸ்பூன்) அளவு வெண்ணீரில் சாப்பிடவும். தீரும் நோய்:: செரிமானக் கோளாறு நீங்கி நன்கு பசியெடுக்கும். இது அனுபவ முறையாகும். பெருங்காயத்தை மட்டும் நல்லெண்ணெய்யில் பொரித்துக்கொள்ளவும்.

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

வைத்தியர்களுக்கு மட்டும்

வீரம் சுத்தி முறை : பிரண்டையைக் கொண்டு வந்து கணுக்களை நீக்கி இடித்து வேண்டியளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சி கசாயம் 5 படி எடுத்துக் கொள்ளவும். அதை 10 லிட்டர் கொள்ளளவுள்ள ஒருமண் பானையில் இட்டு அதற்கு வேடுகட்டி அதில் மொச்சை அளவாக உடைத்த வீரத்துண்டுகளை பரப்பி வைத்து அதன் மேல் பொறுந்தும் ஒரு சட்டியில் மையத்தில் ஒரு துளை போட்டு கவிழ்த்து வைத்து போறுந்துவாய்க்கு சீலைமண் பூசி உலர்ந்த பின் அடுப்பேற்றி 5 மணி நேரம் எரித்து எடுக்கவும். பிறகு மிளகு வேண்டிய அளவு எடுத்து வடிச்ச கஞ்சி கொண்டு அரைத்து வீரத்துண்டுகளுக்கு கவசம் செய்து சற்று உலர்ந்த பின் ஒரு பானையில் 5 படி இளநீர் விட்டு 5 கிராம் பச்சை கற்பூரம் நுனிக்கிப் போட்டு முன் போல் எரித்து எடுத்து மிளகு கவசத்தை பிரித்து எடுத்து காயவைத்துக் கொள்ளவும். இதுவே உயர்ந்த. சுத்தி முறையாகும். இது எமது குடும்ப முறை. அனுப்பவமுறையாகும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

வெள்ளிப் பற்பம்

வெள்ளிப் பொடி 100 கிராம் (அல்லது வேண்டிய அளவு) எடுத்து கல்வத்தில் போட்டு மணத்தக்காளிச் சாறு விட்டு 12 மணிநேரம் அரைத்து வில்லைத் தட்டி காய வைத்து அகலில் வைத்து அகல் மூடி 10 எருவில் புடம் போடவும். பிறகு முன்போல் அரைத்து 15 எருவில் புடம் 2 ,போடவும். * மகிழம் பூ சாற்றில் 12 மணிநேரம் அனைத்து 20 எருவில் 3 புடம். * உத்தாமணிச்சாற்றில் முன்போல் அரைத்து 25 எருவில் 3 புடம். * சிறுஅம்மன் பச்சரிசிச் சாற்றில் 12 மணிநேரம் அரைத்து 30 எருவில் 3 புடம். ஆலம் விழுது சாற்றில் 12 மணி நேரம் அரைத்து 35 விராட்டியில் 3 புடம். * முள்ளிக்கீரைச் சாற்றில் முன்போல் அரைத்து 40 விராட்டியில் 3 புடம். * கோவையிலைச் சாற்றில் முன்போல் அரைத்து 45 முதல் 50 விராட்டி வரை மூன்று புடம் போடவும். தழுக்கு (உலோக சத்து) நீங்கும் வரை 1அல்லது 2 புடம் கூடுதலாக போடலாம். தாதுவிருத்தி லேகியத்தில் காலை மாலை அரிசி அளவு 48 நாள் சாப்பிடவும். தீரும் நோய்கள்.: ஆண்மை குறைவு, நரம்பு தளர்ச்சி., ஆண்குறி எழுச்சியின்மை, வெட்டைச் சூடு, உடல் வலிமை குறைவு, விந்து நஷ்டம்., காசம், போன்றவை தீரும்.
 


நன்றி 

அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்


வெள்வங்கப் பற்பம்

சுத்தி செய்த வெள்வங்கத்தை நன்கு கழுவிய இரும்பு சட்டியில் போட்டு அடுப்பு எரிக்க உருகும் போது சிறு அம்மன் பச்சரிசி யிலையை போட்டு வறுக்க மஞ்சள் நிற பற்பம் கிடைக்கும். அதை எடுத்து கல்வத்தில் போட்டு கஞ்சாயிலைச் சாறுவிட்டு 12 மணிநேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து அகலில் வைத்து அகல் மூடி சீலைமண் செய்து 20 எருவில் புடம். மீண்டும் முன்சாற்றால் 12 மணிநேரம் அரைத்து வில்லை செய்து 30 எருவில் புடம் போடவும். இதுபோல 5 புடம் போடவும். காலை, மாலை, அரிசி எடை தாதுவிருத்தி லேகியத்தில் வைத்து சாப்பிடவும், தீரும் நோய்கள் : மேகம் 20, ஆண்மைகுறைவு , சீக்கிரத்தில் விந்து வெளியேருதல், கிரந்தி, கடுப்பு, பிரமியம், மூலச்சூடு, நீரளிவு.தோல் நோய்கள்., இது எமது பரம் பரை அனுபவ முறையாகும்.





நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

தூதுவேளை இலேகியம்


தூதுவேளை சமூலம்.
ஆடாதோடா சமூலம் 
கண்டங்கத்தரி சமூலம் 
ஆதண்டை சமூலம் வகைக்கு 250 கிராம், 
சுக்கு.,மிளகு.,அரிசி திப்பிலி., அறத்தை,அக்கிரகாரம்.,கோஷ்ட்டம், கருஞ்சீரகம்,நற்சீரகம், நெல்லி வற்றல்., கடுக்காய்., தான்றிக்காய், நெல்ப்பொறி படி கால், இம்புரா வேர் அரைத்தது நார்த்தங்காய் அளவு, எல்லாவற்றையும் கலந்து சட்டியில் பசு நெய் கால் படி விட்டு சூடுயேறியவுடன் சரக்கை சிறிது சிறிதாக தூவி கிண்டிவர மெழுகு பதம் வந்தவுடன் தேன் கால் படி விட்டு கிண்டி இறக்கி வைத்து கொள்ளவும்.
காலை, மாலை, எலந்தப் பழம் அளவு சாப்பிடவும்.
தீரும் நேய்கள் :
சூலை, இருமல்., மந்தாரகாசம், சுவாச காசம், எலிகடி இருமல்.,காய்ச்சல் , கால்,கை. கடுப்பு, வாய்வு.இது முதலாகியதெல்லாம் தீரும். இது எங்கள் குடும்ப அனுப்ப முறையாகும். இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் அரிசியளவு சேர்த்து சாப்பிடலாம் நல்ல குணம் கிடைக்கும்

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

வீரியத்திற்கு மருந்து

தண்ணீரில்லா தேங்காய்யை (கொப்பரை தேங்காய்) எடுத்து அதன் ஓட்டை கவனமாக உடைத்துக் கொண்டு அதில் ஒரு சிறு வட்டமாக ஓட்டைப் போட்டு (சில்லு எடுத்து) அதற்குள் நீர்முள்ளிவிதை 35 கிராம். சாதிக்காய் 11 கிராம்., கிராம்பு 11 கிராம், போட்டு தேங்காய் நிரைய ஆலம் பால் விட்டு தேங்காய் சில் கொண்டு மூடி மூன்று நாள் வைத்து. மூன்றாம் நாள் கோதுமை மாவை வெண்ணீரில் பிசைந்து தேங்காய்க்கு பூசி பிறகு சீலைசெய்து அதன் மேல் மாவுபூசி சட்டியில் நெய் விட்டு எரிக்கவும். மேற்படி தேங்காய்யை அதில் போட்டு பிரட்டி பிரட்டி விடவும். மாவு வெந்து முருகும் பதத்தில் இறக்கி வைத்து சூடு ஆரிய பிறகு மாவையும் சீலையையும் நீக்கி தேங்காயை மட்டும் கல்வத்தில் போட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
காலை, மாலை, நெல்லிக்காய் அளவு சாப்பிடவும்.
தீரும் நோய்கள் :
ஆண்மை குறைவு, ஆண்குறி எழுச்சியின்மை, சீக்கிரம் விந்து வெளியேருதல், விந்து நஷ்டம் போன்றவைகள் தீரும். (ஆலம் பால் எடுப்பது -இலையின் காம்பை.,மற்றும் நுனியை ஒடிக்க சொட்டு சொட்டாக பால் வரும்) இது எமது பரம்பரை முறையாகும். அனுபவமானது

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

பித்த மயக்கத்திற்கு குடிநீர் :

சீரகம் 15 கிராம்.
வெற்றிலை 45 கிராம். 
பசுவெண்ணை தேவையான அளவு .வெண்ணைய்யை வெற்றிலையில் தடவி பொன்னிநிறமாக வறுத்து.,சீரகத்தையும் அதேபோல் செய்து தண்ணீர் விட்டு அரைபாகமாக காய்ச்சி வைத்துக்கொண்டு மூன்று நாள் காலை மாலை ஒரு குவளை குடித்து வரவும் . பித்தம்., பித்த மயக்கம் தீரும். இதுவும் அனுப்ப முறையாகும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

கண்டதையும் நம்பி ஏமாராதீர்கள் நண்பர்களே


இரசமணி என்று - பல விளம்பரங்களைப் பார்த்திருப்பீர்கள், சித்ததர்கள் கூறும் உண்மையான இரசமணியை மிக மிக குறைந்த நபர்களே செய்கிறார்கள் அவர்கள் இதை விற்பனை செய்வதில்லை. இதைக் கொண்டு தனக்கு வேண்டிய முத்தியை தேடிப் போவார்கள்.,இதுதான் உண்மை. மாறாக பலர் உலோகத்தைக் கொண்டு (வெள்ளி, வங்கம், நாகம், தாமிரம்.), திராவகங்களைக் கொண்டும், பாசாணங்களைக் கொண்டும் (துருசு, பால் துத்தம்,) , தாதுப்பொருள் (அப்ரேக்) கொண்டும், போலியான இரசமணிகள் செய்து விற்பனை செய்து வருகிறார்கள், இதில் எந்த சக்தியும் கிடையாது. எந்த பயனும் கிடையாது. மாறாக. போலி இரசமணி அணிபவர்களுக்கு தோலின் நிறம் மாறுதல், அரிப்பு.,தீராத தோல் நோய்கள் ஏற்படுகிறது. ஆகவே ஆண்மீக நண்பர்களும், போராசைக் கொண்ட நபர்களும், சிந்திக்காமல் எளிதில் ஏமாறுகிறார்கள். உழைப்பு.,முயற்சி இதில் கிடைக்கும் பயன்களை விட போலி இரசமணி மூலம் நிச்சயம் எந்த பயனும் கிடைக்கவே கிடைக்காது. ஒரு செப்பு தகட்டில் எந்திரம் எழுதி.,மந்திரம் செபித்தால் அதில் கிடைக்கும் பயன் கூட போலி இரசமணியில் கிடைக்காது. அடியேனும் உண்மையான இரசமணியும், போலியான இரசமணி செய்யத் தெரிந்தவன் தான்.தயவு செய்து சொல்கிறேன் ஏமாறாதீர்கள் நண்பர்களே.




நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

சித்திர மூலஎண்ணெய்

சித்திரமூல வேர்ப் பட்டை பச்சை 35 கிராம் எடுத்து கவனமாக அரைத்து (உடம்பில் பட்டால் வெந்து போகும்) நல்லெண்ணெய் 500 மில்லி, பசு நெய் 500 மில்லி, எடுத்து ஒன்றாக கலந்து மேற்படி விழுது போட்டு பதமாக கடுகு திறல் பதம் வத்தவுடன். இறக்கி வைத்து வடிகட்டி கொள்ளவும்.
காலை, மாலை, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிடவும். ஆகாரத்திற்கு முன். 
தீரும் நோய்கள் :: 
சூடு, புண்கள், செங்கிரந்தி, சிரங்குகள்,உடலில் தடிப்பு, முலங்கால் வலி, குறித்துவார எரிச்சல்., வாய் நாற்றம்., மூலக்கடுப்பு, சீல் மூலம்., தீரும்.
பத்தியம் :
கடுகு.,நல்லெண்ணெய்., புளி, புகையிலை நீக்கவும்.இது எமது குடும்ப அனுபவமுறையாகும். 

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

கண்ணில் பூவிழுதலுக்கு


ஈச்சம் விதையை தண்ணீரில் ஒருநாள் ஊறப்போட்டு எடுத்து நன்கு அரைத்து களிபதம் வந்ததும் இரவு படுக்கும் போது கண்களை மூடிக்கொண்டு அதன் மேல் மருந்தை வைத்து துணியால் கட்டிக்கொண்டு தூங்கவும். இதுபோல வெண் படலம் மறையும் வரைசெய்யவும். இது அனுபவ முறையாகும். கண்பார்வை நன்கு தெரியும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

சுவாச குடோரி சொட்டெண்ணை

சுத்தி செய்த கெந்தகம் பலம் 1; சுத்தி செய்த தாளகம் பலம் 1; தேங்காய் தனிப்பால் 11/2 படி, திருகு கள்ளி அல்லது கொடிக்கள்ளி பால் 1/2. படி சேர்த்து வெள்ளெருக்கம் பூ போட்டு பதமாக காய்ச்சி இறக்கவும். பாலில் 5 அல்லது 10 சொட்டு காலை மாலை சாப்பிடவும். 
தீரும் நோய்கள் :
காசம், சயம் சுவாச காசம் (ஆஸ்துமா). அரிப்பு, சொரி, சிறங்கு, புண்கள், சோரியாஸிஸ், தோல்நோய்கள் தீரும். இது எங்கள் பரம்பரை அனுபவ முறையாகும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

சொறி, சிரங்கு,படைக்கு எண்ணெய்

நல்லெண்ணெய் படி 1, எருக்கம்பூ சாறு படி 1, இரண்டையும் கலநந்து பதமாக காய்ச்சி இறக்கு முகத்தில் கெந்தகம் 2 விராகன் எடை தூள் செய்து எண்ணையில் போட்டு கலக்கி இறக்கவும்.
நோய்யுள்ள இடத்தில் தடவி ஊறவைத்து சீயக்காய் கொண்டு தேய்த்து குளிக்கவும். தீரும் நோய்கள் . சோரியாசிஸ்,அரிப்பு,சொறி, சிரங்கு, படை,பற்று, இது எங்கள் பரம்பரை முறையாகும். அனுபவமானது
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

முழங்கால் வலிக்கு நிவாரண மருந்து


சுத்தி செய்த பறங்கிப்பட்டை 100 கிராம் வெற்றிலைச்சாற்றால் அரைத்து (ஒரு மணி நேரம்) வெயிலில் காயவைக்கவும். இதுபோல 10 நாட்கள் செய்து பிறகு சுக்கு 20 கிராம், மிளகு 20 கிராம், சாதிக்காய் 20 கிராம், அரிசி திப்பிலி 20 கிராம், வால் மிளகு 20 கிராம், இவைகளை இடித்து தூள் செய்து வஷ்த்திர காயம் செய்து இவைகளை ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை கால் டீஸ்பூன் அளவு எடுத்து தேன் (அல்லது) நெய்யில் கலந்து நோய் தீரும் வரை சாப்பிடவும்., மருந்து உண்ணும் போது பால், மோர், நெய் மிகுதியாக சேர்க்கவும். புளி கண்டிப்பாக சேர்க்கக் கூடாது. அனுபவ முறையாகும். 
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

நண்பர்களே

வணக்கம். என்னிடம் சித்தவைத்தியம் கற்றுக்கொள்ள. எவ்வளவு ரூபாய் என்று சில நண்பர்கள் கேட்பது மிகவும், வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. உண்மையான ஆர்வம்.,உண்மையான உழைப்பு இருந்தால், தட்சணை இல்லாமல் கற்றுத்ததர அடியேன் தயாராக உள்ளேன். என்னை பொறுத்தவரையில் சித்த வைத்தியம் வளர வேண்டும்., ஆனால் நிறைய போலிகள் உள்ளதால் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. 
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

பூவரசங்காய் எண்ணெய்

பூவரசங்காய் 1பங்கு, பூண்டு 1பங்கு, இரண்டையும் நன்கு இடித்து வேப்பயெண்ணெய் சமமாக சேர்த்து பதமாக காய்ச்சி இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரவும். தீரும் நோய்கள் : 
கிரந்தி, புண்கள், மேகநோய்கள்,ஊரல்,வெண்புள்ளி, கருங்குட்டம், சகல விதமான தோல்நோய்கள், ( சோரியாஸ்சிஸ் கட்டுப்படுத்தும்), பத்தியம். பூசணி, பறங்கிக்காய்., பாகற்காய்., அகத்திக்கீரை., புளி, புகை, மது நீக்கவும். (வெண்புள்ளி மட்டும் 2மாதத்திற்கு பிறகுதான் குணம் தெரியவரும்) மருந்தை விடாமல் சாப்பிட்டு வரவும் கண்டிப்பாக குணமடையும். இந்த எண்ணெய்யை மேல் பூச்சாக பூசி வரவும். இது எங்கள் பரம்பரை அனுபவ. முறையாகும். பூவரசம் காய் கிடைக்காத போது 60 வருடத்திற்கு மேல் உள்ள மரப்பட்டையை பயன் படுத்தவும். பலன் ஒன்றுதான்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

துருசு செந்தூரம்

அயச்செந்தூரம், கெந்தகம், வறுத்த துருசு சமமாக எடுத்து எலுமிச்சம் பழச்சாற்றால் 3 நாட்கள் அரைத்து, நன்கு உலர்த்தி அகலில் வைத்து மேல் அகல் மூடி சீலைமண் செய்து 30 எருவில் புடம். பிறகு இதன் எடைக்கு கால் பங்கு சுத்தி செய்த வீரம் சேர்த்து முன்போல் பழச்சாற்றால் அரைத்து 5புடம். ஓருசில நேரத்தில் ஓரிரரு புடம் அதிகமாகலாம். செந்தூரத்தில் களிம்பு நீங்கிய பிறகு காலை மாலை அரிசி எடை அளவு தேன், நெய், லேகியத்தில். வைத்து 48 நாட்கள் சாப்பிடவும். தீரும் நோய்கள் : வெண்புள்ளி, மேக நோய்கள்., வாத நோய்கள், பித்த நோய்கள், கபநோய்கள், சகலவிதமான தோல் நோய்கள். தீரும். (சோரியாசிஸ் மட்டும் 5 வருடம் வராமல் கட்டுப்படுத்தும் ) இது எங்கள் பரம்பரை முறையாகும். அனுபவமானது சகல வித நோய்களும் கண்டிப்பாக தீரும். (குறிப்பு வில்லை சீக்கிரமாக காயாது நன்கு வெயிலில் உலர்த்தவும் இதுதான் மிக முக்கியம்)
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

துருசு செந்தூரத்தால் தீரும் நோய்கள்

மூட்டுவலிகள், வாதங்கள், காமாலை நோய்கள், தோல் நோய்கள், ஆண்மை விருத்தி, ஆண்குறி எழுச்சி., குறிப்பாக சொன்னால் இது ஒரு காய கல்ப மருந்தாகும். முறைப்படி செய்து பயன் பெறுங்கள், மக்ககள் பிணிதீருங்கள். மாறாக இந்த மருந்தைக் கொண்டு பெரும் பணம் ஈட்ட நினைக்காதீர்கள் தயவு செய்து. எமது அன்பான வேண்டுகோள். இந்த ஒருமருந்து போதும் சகல நோய்கள் தீர்க்க. வெளிப்படையாக சொல்லி விட்டேன் இனி இறைவன் கையில்தான் உள்ளது.

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

மதுமேக சூரணம் (சர்க்கரை நோய் கட்டுப்படுத்த)

எள்ளுப்பிண்ணாக்கு 18கிராம், ஆவாரம்பட்டை 18 கிராம்,பருத்தி பருப்பு 48 கிராம், வால் மிளகு 24 கிராம், இலவங்கப்பட்டை 24கிராம், மாசிக்காய் 12 கிராம், சிறுநாகப்பு 12 கிராம்,சுத்தி செய்த பறங்கிப்பட்டை 24கிராம், இவைகளை இடித்து சலித்து வைத்ததுக்கொண்டு காலை.,மாலை, 1தேக்கரண்டி (டீ ஸ்பூன்) அளவு வென்னீரில் சாப்பிடவும். தீரும் நோய்கள் :
வெகுமூத்திரம், இந்திரியநட்டம், சர்க்கரை நோயால் ஏற்படும் அரிப்பு.,புண்கள்.,தீரும். இதனுடன் காளமேக நாராயணச் செந்தூரம் ஒன்று அல்லது இரண்டு அரிசியளவு சேர்த்துக்கொள்ளவும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்


நாகப் பற்பம்

சுத்தித்த நாகம் 100 கிராம். நன்கு கழுவிய இரும்பு சட்டியிலிட்டு உலையில் வைத்தூத உருகும் , அப்போது வேலிப்பருத்தி இலையைப் போட்டு வறுக்க மஞ்சள் நிறப் பற்பம் கிடைக்கும். பிறகு வேலிப்பருத்தி இலைச்சாற்றால் 6 மணிநேரம் அரைத்து புடம் போடவும். இதுபோல 5புடம் போடவும்.பிறகு துத்தியிலைச்சாற்றில் அரைத்து 3 புடம் போடவும். பற்பத்தின் எடையில் பாதியளவு சுத்தித்த ரசம் எடுத்து அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வெடியுப்பு திராவகம் ஊற்றி வெயிலில் வைக்கவும் ரசம் பூத்து உப்பாகும். பிறகு சுத்தித்த நத்தை ஓட்டை உத்தாமணிச் சாற்றால் அரைத்து ஊதி யெடுக்க நத்தை ஓட்டு சுண்ணம் கிடைக்கும். நாகப்பற்பம் எடைக்கு சமமாக நத்தை ஓட்டு சுண்ணமும், ரசப்பூவும் சேர்த்து உத்தாமணிச் சாற்றால்அரைத்து காய வைத்து சட்டியில் போட்டு மேல் சட்டி மூடி சீலைமண் 3 செய்து 9 மணிநேரம் எரிக்கவும் . பிரித்து பார்க்க மேல் சட்டியில் பதங்கம் யேரியிருக்கும், அதில் சிலநேரம் ரசமும் இருக்கலாம் ஆகவே மீண்டும் வெடியுப்பு திராவகம் விட்டு வெயிலில் வைத்து முன் போல் அரைத்து பதங்கம் மேலே ஏறாதவரை எரித்து எடுக்கவும்.
காலை, மாலை நெய்,(அல்லது) வெண்ணையில் குன்றிமணி எடை சாப்பிடவும். தீரும் நோய்கள் : மூலம்.,பவுத்திரம், ரத்தமூலம், சீழ் மூலம்., இரத்தபேதி, கிராணி, உடலில் உண்டாகு கொப்பளம்., ஆண்மை விருத்தி, ஆசனவாய் எரிச்சல்., ஆசனவாய் அரிப்பு.,போன்றவை தீரும். இது எங்கள் பாரம் பரிய முறையாகும்.,

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

மிக அவதானம் ஏமாராதீகள் அன்பர்களே

தனெக்கென்று ஒரு வேடத்தில் சித்தர் என்றும், யோகி என்றும், வைத்தியரென்றும், அல்லது சித்தர்களின் பெயராலோ, மகான்களின் பெயராலோ கையில் ஒரு மூலிகையை வைத்துக்கொண்டு வித விதமான புகைப்படங்களோடு விளம்பரம் செய்கிறார்கள். முகநூல்களில் வரும் விளம்பரத்தை பார்த்து யாரும் ஏமாரவேண்டாம். மாறாக அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவில் நல்ல மருந்துகள் இலவசமாக கிழாயங்கள், சூரணங்கள், மாத்திரைகள், தைலங்கள், கிருதங்கள், பற்பங்கள், செந்தூரங்கள்.,சுண்ணங்கள், மெழுகுகள் இன்னும் பலவித மருந்துகள் சித்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். அதைவிட்டு நல்லமுறையில் முடிக்க படாத மருந்துகளை சாப்பிட வேண்டாம். நான் இங்கே கூறுவது அனுபவமில்லாத போலியான சித்தமருத்துவர்களையே, சிந்தித்து முடிவெடுங்கள் அன்பர்களே.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

வெட்டைச் சூட்டுக்கு மருந்து

ஆனை நெருஞ்சி இலை, கீழாநெல்லி இலை, கட்டுக்கொடி இலை, வெள்ளருகு இலை, வெள்ளை காக்கரட்டான் (வெள்ளை சங்குப்பூ செடி) இவைகளை நன்கு அரைத்து ஒரு எலுமிச்சம் பழம் அளவு எடுத்து காலை மாலை மூன்றுநாள் பசும் தயிரில் கலந்து சாப்பிடவும். (அல்லது) மேற்கண்டமருந்துகளை காயவைத்து சூரணம் செய்து காலை மாலை 10 நாட்கள் தேக்கரண்டி வீதம் மோர் அல்லது தயிரில் சாப்பிடலாம். தீரும் நோய்கள் : ஆண்.பெண், வெட்டைச்சூடு, அஸ்திகாங்கை.,அஸ்திசுரம்., பெண்களுக்கு வெள்ளை படுதல்,எலும்புருக்கி, போன்றவைகள் தீரும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

வாதசம்மந்தமான நோய்களுக்கு அயக்காந்தச் செந்தூரம்

அயம் (இரும்புத்தூள்), காந்தம் இரண்டும் சம அளவாக எடுத்து பிரணண்டைச்சாற்றால்9மணிநேரம் அரைத்து வில்லை செய்து புடமிட செந்தூரம்., இதுபோல 10 புடமிடவும். நல்ல செந்தூரம். பிறகு செந்தூரத்தை பிரண்டைச் சாற்று விட்டு சூரியபுடமிடவும். இதுபோல 3 முறைகள் செய்து, அரைத்து பாட்டிலில் அடைக்கவும். அனுபானம் : 
தேவையான அளவு பிரண்டைக்கொழுந்தை கொண்டுவந்து அரைத்து காயவைத்து சூரணமாக செய்து கொள்ளவும். அளவு : செந்தூரம் 2அரிசி எடையும், மேற்படி சூரணம் 4 அரிசி எடையும் எடுத்து தேனின் காலை மாலை சாப்பிடவும். பத்தியம் இல்லை. மருந்து சாப்பிடும் போது பிரண்டைத் துவையல் சாப்பிடவும்.
தீரும்நோய்கள் :
மூட்டுவலிகள், பிடிப்புகள், வாதநோய்கள், முழங்கால் வலிகள், நாள்பட்ட சுளுக்குகள், பசியின்மை, செறியாமை, குடல் புண்கள். வயிற்றுவலிகள் போன்றவை குணமாகும்.  அடியேன் கூறும் பதிவுகள் அனைத்தும் எங்கள் பரம்பரை முறைகள் ஆகும்.

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

காந்தச் செந்தூரம்

காந்தத்தை சோற்றுக்கற்றாழைச்சாற்றால் அரைத்து புடம் போட செந்தூரம். இதுபோல 5முறைபுடமிடவும் நல்ல செந்தூரம்.பிறகு கருவேலான்காய் முற்றாத பக்குவத்தில் கொண்டுவந்து இடித்து சாற்றால் அரைத்து புடமிடவும்.இதுபோல5புடமிடவும்.இச்செந்தூரத்தில் மேற்கண்ட சாறுவிட்டு வெயிலில் காயவைக்கவும். இதுபோல 5முறைகள் செய்து தூள் செய்து சீசாவில் வைத்துக்கொள்ளவும்.
துணைமருந்து :
தேவையான அளவு கருவேலாங்காய் பிஞ்சுகளை கொண்டு வந்து காயவைத்து தூள் செய்து கொள்ளவும்.
அளவு : குன்றிமணி எடை, செந்தூரம்.,மேற்படி சூரணம் பட்டாணி அளவு எடுத்து தேனில் கலந்து காலை மாலை சாப்பிடவும். 3அல்லது 5அல்லது 7 நாட்கள்.
தீரும் நோய்கள் : ஆண். பெண் வெட்டைச் சூடு, தீராத பெரும்பாடு, தீராத வெள்ளைப்படுதல், உடல் சூடு, சோகை, நீர்எரிச்சல், நீர்கடுப்பு, கற்பப்பை புண்கள், வயிற்றுப்போக்கு.,குடல் புண்கள் போன்றவை தீரும். இது எமது பரம்பரை முறையாகும். 

நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

காமாலைக்கு மருந்து

அயப்பொடி (இரும்பு தூள்) தேவையான அளவு எடுத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு 9மணிநேரம் அரைத்து புடமிடவும். பிறகு அவரி (நீலி செடி) இலைச்சாற்றில் அரைத்து 5 புடம் போடவும். பிறகு அரசமரப்பட்டையின் சாறு (அல்லது) கசாயமிட்டு அரைத்து 4 புடம் போடவும். செந்தூரம். இந்த செந்தூரத்தை அவரியிலைச்சாறு , அரசம்பட்டைச் சாறு (அல்லது) கசாயம் சமமாக கலந்து வெயிலில் நன்றாக காயவைக்கவும், இதுபோல. 3 முறைகள் பாவனைகள் செய்யவும். காய்ந்ததும் தூள் செய்து சீசாவில் வைத்துக் கொள்ளவும்.
துணைமருந்து : தேவையன அளவு அவரியிலை, அரசம் பட்டையை நன்கு காயவைத்துக்கொண்டு தூள்செய்து வைக்கவும். அளவு : செந்தூரம் 1 அரிசி எடையும், சூரணம் பட்டாணி அளவும் எடுத்து தேனில் கலந்து காலை, மாலை, 7 நாட்கள் கொடுக்கவும். தீரும் நோய்கள் :வரைக்காமாலை, ஊதுகாமாலை, மஞ்சள் காமாலை, இரத்தகாமாலை (சிறுநீரில் இரத்தம் வெளியேறுதல்), கல்லீரல் வீக்கம்., மண்ணீரல் வீக்கம்., சோகை, வயிற்றுபுண்கள், விசகடிகளால் ஏற்படும் புண்கள், அரிப்புகள், சிலந்தி கடிகள்,போன்ற நோய்கள் தீரும். இதுவும் எங்களது பரம்பரை முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

நண்பர்களே

வணக்கம் 
எமது பதிவுகள் அனைத்தும் செய்து கைகண்ட முறைகள்.,பரம்பரையாக செய்த முறைகளே. ஆர்வமுள்ள வைத்தியர்களும், மக்களும் பயன்பெறும் வகையிலேயே அடியேன் பதிவிடுகிறேன். ஆனால் சிலர் எமது முறையில் மருந்துகள் செய்து அதிக பணத்திற்கு விற்பதாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். மிகவும் வேதனைப் படுகிறேன். தன்நலம் கருதாது எமது பரம் பரை முறைகளை வெளிப்படையாக சொல்லுகிறேன். நீங்கள் எமக்கு குரு தட்சணையாக செய்ய வேண்டியது. நீதியாய் மருந்துகளை விற்பதுவே. மருந்து செய்ய எவ்வளவு செலவாகிறதோ அதைவிட இரண்டு பங்கு மட்டும் பணம் வாங்குங்கள். நோயாளியிடம் அதிக பணம் வாங்குவது மிக மிக பாவம். ஏனெனில் அவர்கள் செய்த கர்மாவின் பயனாக நோய்கள் வருகிறது என்று சித்தர்கள் கூறுகிறார்கள். கண்டிப்பாக உங்களை நம்புகிறேன் எமது வேண்டுகோளை ஏற்பீர்கள் என்று.

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்



தலைவலிக்கு தைலம்

இஞ்சி., சீரகம்., மிளகு., அதிமதுரம்.,எட்டிவிதை., வகைக்கு 50 கிராம்,(எட்டிவிதையை மட்டும் நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.) மற்ற மருந்துகளை இடித்து நல்லெண்ணெய்யில்(1/2 லிட்டர்) எல்லாவற்றையும் கலந்து பதமாக காய்ச்சிக் கொள்ளவும். வடித்து சீசாவில் வைத்துக்கொண்டு வாரம் இருமுறை காலையில் தலைக்கு தேய்த்து மாலைய்யில் வெண்ணீரில் தலை முழுகவும். பகலில் தூங்க க் கூடாது. பழையசோறு, மோர், தயிர்., போன்றவற்றை தவிர்கவும். தீரும் நோய்கள் : தலைவலி, ஒருபக்க தலைவலி, தலைபாரம், பிடரிவலி, கண்ணெரிச்சல், கண்ணில் நீர் வடிதல், மேலும் வலி, வீக்கம் உள்ள இடங்களில் இத்தைலத்தை பூச வலிகள், மூட்டுவலிகள், வாதசம்மந்த நோய்கள் தீரும். அனுபவமுறையாகும்

நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் 

பூச்சி வெட்டுக்கு தைலம்

 நல்லெண்ணெய் 75 மில்லி, முசுமுசுக்கைச்சாறு 50 மில்லி, எருக்கம்பால் 25 மில்லி, இவையெல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சிறுதீயில் பதமாக காய்ச்சி வடித்துக்கொள்ளவும், பூச்சிவெட்டுள்ள இடத்தில் தொட்டுப் போட்டுவர முடிமுளைத்து வளரும். இது எங்களது பரம்பரை முறையாகும். அனுபவ முறை
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர் 

சித்திரமூல இடிவல்லாதி

கொடிவேலி வேர்ப்பட்டை, நிலப்பனைகிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு., சீந்தில் தண்டு சூரணம்., பறங்கி பட்டை, வகைக்கு 100 கிராம். சேராங்கொட்டை 200 கிராம். சேராங்கொட்டையை இரண்டு துண்டாக வெட்டிக்கொண்டு 1/2 லிட்டர் பசு நெய்யில் போட்டு காய்ச்சவும்., பிறகு மிதக்கும் கொட்டையை எடுத்து அரைத்து கொண்டு., பிறகு மற்ற மருந்துகளை தூள் செய்து எல்லாவற்றையும் கலந்து இடிக்கவும். கெட்டிப் பதம் வரும் போது காய்ச்சிய நெய்விட்டு இடிக்கவும், பனம் கருப்பட்டி 700 கிராம் சேர்த்து இடிக்கவும், தேன் தேவையான அளவு சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும். காலை, மாலை, இலந்தை ப் பழம் அளவு சாப்பிடவும். பிறகு ஒரு குவளை காய்சியப்பால் குடிக்கவும். தீரும் நோய்கள் : குட்டம்  18, சூலை 18, குண்மம் 8, விசகடிகள்,தோல் நோய்கள், பாண்டு, சோகை, அரிப்பு, தடிப்பு, தேமல்.,காளாஞ்சகப்படை (சோரியாசிஸ்), மூட்டு வலிகள், வாதநோய்கள், உடல் பலகீனம்., பேன்ற நோய்கள் தீரும். இது எமது பரம்பரை முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர் 

துவர்ப்பு எண்ணெய்

அரசம் பட்டை, நாவல் பட்டை, மருதம் பட்டை, ஒதியம் பட்டை, ஆவாரம் வேர், தண்டு, பட்டை, காசுக்கட்டி (சிறிதளவு) பட்டை வகைககளை சமமாக எடுத்து இடித்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு சூரிய ஒளியில் ஒரு வாரம் வைத்து எடுத்து சீசாவில் வைத்துக்கொண்டு., ஆறாத புண்கள், தீக்காயம், சர்க்கரை நோயினால் வரும் புண்களுக்கு தொட்டு போட்டு வர புண்கள் ஆறும்.
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர் 

சூதக வியாதிக்கு

வாழைச்சருகுச் சுட்டச் சாம்பல் 35 கிராம், சுக்கு சுட்டச் சாம்பல் 8கிராம், பனங்கருப்பட்டி 8 கிராம், இவற்றை எல்லாம் சேர்த்து அரைக்க மெழுகு பதம் வரும்., எடுத்து வைத்துக் கொண்டு, 3 நாட்கள்., காலை மாலை சுண்டைக்காய் அளவு சாப்பிடவும்., தீரும் நோய்கள் : சூதகக் கட்டு, சூதக வலி, நீர்கட்டிகள், மற்றும் கற்பபை சம்மந்த கோளாறுகள் தீரும். இதுவும் பாரம்பரிய முறை ஆகும். மேலும்., மேல்பூச்சு மருந்து வைக்கோல் அல்லது மூங்கில் இலையை காயவைத்து சாம்பலாக்கி நெய்யில் கலந்து அடிவயிற்றில் பூசிவர மேற்கண்ட நோய்கள் குணமாகும். நம்பிக்கையுடன் செய்யலாம்.

*சூதக வியாதி -என்றால் கற்பப்பை நோய்கள். சூதக கட்டு -என்பது மாதவிடாய் தேங்குதல்

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் 

அயக்காந்தச்செந்தூரம் (தாது விருத்திக்கு)

சுத்தி செய்த இரும்புத்தூள், காந்தம், கெந்தகம் வகைக்கு 35 கிராம். பூநீரு 7 கிராம் இவற்றை கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றால் 12 மணிநேரம் அரைத்து வில்லை செய்து காயவைத்து 50 எருவில் புடம் போடவும். செந்துரம், சரிவர சிவக்கா விட்டால் மீண்டும் மேற்படி சாற்றால் அரைத்து புடம் போடவும், (5 புடம் போடவும்) நல்ல செந்தூரம் கிடைக்கும். காலை மாலை 5அரிசி எடை எடுத்து தேன் அல்லது தாதுவிருத்தி லேகியங்களில் சாப்பிடவும். தீரும் நோய்கள் : உடல் பலகீனம்., நரம்பு தளர்ச்சி., இரத்தச் சோகை, ஆண்மை விருத்தி , இரத்தவிருத்தி செய்யும்., இது எமது பரம்பரை முறையாகும்

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்

கெந்தக மெழுகு

சுத்தி செய்த கெந்தகம் 100 கிராம், முந்திரிப்பழச்சாறு 500 மில்லி எடுத்துக்கொள்ளவும். முதலில் கெந்தகத்தை ஒரு மண்சட்டியில் போட்டு அடுபேற்றி உருகும் போது தேக்கரண்டியில் சாறு எடுத்து.,சுருக்குக் கொடுக்கவும் இதுபோல எல்லாச்சாற்றையும் கொடுத்தபிறகு கெந்தகத்தை எடுத்து கல்லலத்தில் போட்டு நன்கு அரைக்கவும் மெழுகாகும். அதை ஒரு பண்டத்தில் வைத்துக்கொண்டு., காலை மாலை சுண்டைக்காய் அளவு எடுத்து அதற்கு சமம் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடவும். பிறகு ஒரு குவளை பால் குடிக்கவும். தீரும் நோய்கள் :
அம்மைநோய், வேர்குரு, வேனல்கட்டிகள், அரிப்பு,சொறி, சிறங்குககள், மேக நோய்கள், கிரந்தி நோய்கள், போன்றவை தீரும். மேலும் தாதுவிருத்தி செய்யும். இதுவும் எமது பரம்பரை முறையாகும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்

நன்னாரிச்சூரணம்




சிறுநன்னாரி வேர் தூள் செய்தது 100 கிராம், மிளகுத்தூள், 20. கிராம், இரண்டையும் கலந்து வைத்துக்கொண்டு காலை, மாலை, ஒரு தேக்கரண்டி வீதம், தேன் அல்லது நீராகாரம் அல்லது மோர் இவைற்றில் ஏதேனும் ஒன்றில் கலந்து சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும். தீரும் நோய்கள், ஆண், பெண் வெட்டைச்சூடு, வேர்குரு, அம்மை, சூட்டினால் ஏற்படும், தலைவலி,வேனல்கட்டி,நீர்எரிச்சல், நீர்கடுப்பு, வயிற்றுப் புண், தோலில் உண்டாகும் அரிப்பு, போன்றவை தீரும், இது எமது அனுபவமுறையாகும்
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் 

Friday, November 11, 2016

காந்தச்செந்தூரம்




காந்தம் 100 கிராம், கெந்தகம் 100 கிராம், எடுத்து, கரிப்பான் சாற்றால் 12 மணிநேரம் அரைத்து, வில்லை செய்து, அகலில் வைத்து 50 எருவில் புடம், எடுத்து அதன் எடைக்கு கெந்தகம் சமமாக சேர்த்து முன்சாற்றால் முன் போல அரைத்து புடம்., இதுபோல மூன்று புடம் போடவும், மறுபடி அதன் எடைக்கு கெந்தகம் சமன் கூட்டி இதனெடைக்கு சித்திரமூல வேர்ப்பட்டையை சேர்த்து சேர்த்து கோழிமுட்டை வெண்கருவிட்டு அரைத்து, 100 எருவில் புடம் போட செந்தூரம்., அதை மீண்டும் எடுத்து எருக்கம்பால் விட்டுஅரைத்து 100எருவில் புடம் போட கருஞ்சிவப்பு செந்தூரம்., காலை. மாலை, குன்றிமணி எடை தேனில் கலந்து சாப்பிடவும்
தீரும் நோய்கள், மூட்டுவலி, சோகை,பாண்டு,பித்தம்.,வாதநோய்கள், எட்டு குன்மம், தமரக வாயு, அண்டவாதம், அண்டவாயு, இது அனுபவ முறையாகும். 9865070850 ;9943850856, ,மேலும் அரிப்பு, சொறி, சிறங்கு, தேமல்., ஆரம்ப நிலை வெண்புள்ளி, சோரியாசிஸ்ஸை கட்டுப்படுத்தும், கரப்பான், போன்ற தோல் நோய்களை குணமாகும்., உடல் தேறும், பெண்களுக்கான வெள்ளைப்படுதல், ஆண், பெண் வெட்டைச்சூடு. போன்றவை தீரும்., மேலும் பல நோய்களுக்கு தக்க அனுபானங்களில் கொடுக்க நோய்கள் தீரும்,

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைசித்தவைத்தியர் 

தாழம் விழுது குடிநீர்

தேவையான அளவு தாழம் விழுது கொண்டுவந்து மேல் தோல்நீக்கி. சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மண்சட்டியில் போட்டு, தண்ணீர் விட்டு பாதியளவாக காய்ச்சி, காலை மாலை ஒருகுவளை வடிகட்டி பனங்கல்கண்டு சேர்த்து குடிக்கவும். தீரும் நோய்கள் : அதிக உஷ்ணத்தால் உண்டாகும் நாவரச்சி, நீர்எரிச்சல், நீர்சுருக்கு, மேககாங்கை, அம்மை, வேர்குரு, அம்மைநோயால் உண்டாகும் இருமல், உஷ்ணசம்பந்தமான பலநோய்கள் தீரும்., இது எமது பரம்பரை முறையாகும்., இது எமது அனுபவ முறையாகும்.

நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்  

எலிக்கடிக்கு மருந்து





நல்லெண்ணெய் கால் (வ) படி, ஊமத்தை வேர் மூன்று (மூன்று செடியின் வேர்) நைத்து எண்ணையில் போட்டு வேர் சிவக்கக் காய்ச்சி இறக்கி வைத்துக்கொண்டு, காலை மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும்., ஐந்து நாள் சாப்பிடவும். பத்தியம்., புளி,புகையிலை, தவிற்கவும், தீரும் நோய்கள், எலிகடி, இதனால் உண்டான இருமல்., இளைப்பு, காசம், இது போன்ற 21 வகையும் தீரும், இது எமது பரம்பரை முறையாகும், யாம் செய்து கைகண்டமுறையாகும், அனுபவ முறையாகும்.




நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர் 

பாம்பு கடி விடத்திற்கும், தேள் கடி விடத்திற்கும் மருந்து

ஆடுதீண்டாப்பாலை வேரை அரைத்து நெல்லிக்காய் அளவு காலை மாலை மூன்று நாட்கள் வென்னீரில் கொடுக்கவும். சகல பாம்புகடி விசமும் தீரும். 
பத்தியம் உப்பை வறுத்து பச்சரிசி கஞ்சியில் போட்டுக் குடிக்கவும், மேற்கண்ட மூன்று நாட்களும் தண்ணீர் தொடக்கூடாது, (வென்னீரை மட்டுமே) பயன் படுத்தவும். பால் சாப்பிடலாம், வென்னீர் குடிக்கலாம், மற்ற உணவு தவிர்த்தல் வேண்டும், கடிவாயில் ஆடுதீண்டாப்பாளை இலையை அரைத்து பூசவும் வீக்கம் இருந்தால் குணமாகும்
தேளுக்கு ஆடுதீண்டாப்பாளை வேரையரைத்து நெல்லிக்காய் அளவு வென்னீரில் ஒரு வேளைக் கொடுக்கவும், அதன் இலையை அரைத்து தேள் கொட்டுவாய்யில் பூசவும் கடுப்பு தீரும், மேலும் வயிற்றுவலி., வாந்தி, வயிற்றுப்போக்கு (காலரா) , விசகாய்ச்சல், போன்ற வற்றிற்கு இரண்டு வேளை கொடுத்தால் போதும், பத்தியம் முன்போல், கைகண்டமுறையாகும்,